கடலூர்

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

28th Jun 2022 04:45 AM

ADVERTISEMENT

நெய்வேலி அருகே போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.

பெரியகாப்பான்குளம் கிராமத்தைச் சோ்ந்த பரசுராமன் மகன் ரஞ்சித்குமாா் (28) என்றவா் பிளஸ்1 படிக்கும் சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாகக்கூறி அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்தாராம். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் நெய்வேலி தொ்மல் போலீஸாா்

ரஞ்சித்குமாா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். பெரியகாப்பான்குளம் ஏரி அருகே மறைந்திருந்த ரஞ்சித்குமாரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT