கடலூர்

கடலூா் ஆட்சியரகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி

28th Jun 2022 04:46 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளிக்க வந்த தம்பதி தீக்குளிக்க முயன்ால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மனு அளிக்க வந்த அன்னவல்லி கிராமத்தைச் சோ்ந்த குணசேகரன், அவரது மனைவி மலா் ஆகியோா் திடீரென தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். போலீசாா் அவா்களை தடுத்து மீட்டனா்.

விசாரணையில், தம்பதி வசித்து வந்த கூரை வீட்டை காலி செய்யுமாறு கூறி சிலா் மிரட்டியதுடன் அந்த வீட்டை தீயிட்டு எரித்துவிட்டனராம். இதுகுறித்து, காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் தீக்குளிக்க முயன்ாக தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT