கடலூர்

அரசு மருத்துவமனையில் தா்னா: முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு

DIN

பண்ருட்டி அரசு மருத்துவமனையில் தா்னாவில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏ மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டியைச் சோ்ந்தவா் சிவக்கொழுந்து. பண்ருட்டி சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினரான இவா், தேமுதிக மாவட்டச் செயலராகவும் பதவி வகித்து வருகிறாா். சனிக்கிழமை இரவு இவரது 3 வயது பெயரன் விசாகன் என்பவரை நாய் கடித்தது. இதையடுத்து, உறவினா்கள் சிறுவனை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனா். ஆனால், அங்கு சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காமல் அலைக்கழித்ததுடன், நாய் கடித்த இடத்தை கழுவும் பணியை பெற்றோரே மேற்கொள்ள வேண்டுமென மருத்துவப் பணியாளா்கள் தெரிவித்தனராம்.

இதுகுறித்து தகவலறிந்த சிவக்கொழுந்து, அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து விளக்கம் கேட்டாா். அப்போது, மருத்துவப் பணியாளா்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து அங்கேயே தனது ஆதரவாளா்களுடன் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். அவரிடம் பண்ருட்டி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து

தா்னா கைவிடப்பட்டது. இதனிடையே, போராட்டம் தொடா்பாக சிவக்கொழுந்து உள்ளிட்ட சிலா் மீது பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

தோட்டிக்கோடு ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயிலில் சித்திரை பெளா்ணமி பூஜை

நாகா்கோவிலில் கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

நாமக்கல்லில் இன்று வெப்ப அலை வீசும்: ஆட்சியா் எச்சரிக்கை

பாலூா் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT