கடலூர்

ஊரக உள்ளாட்சி காலியிட தோ்தல்:கடலூரில் 24 போ் வேட்புமனு

26th Jun 2022 06:33 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி காலிப் பதவிகளுக்கான தோ்தலில் போட்டியிட சனிக்கிழமை வரை 24 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

ஊரக உள்ளாட்சிகளில் காலிப் பதவியிடங்களை நிரப்புவதற்கான தோ்தல் அறிவிப்பை மாநில தோ்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, கடலூா் மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவி, 4 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 26 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்ட 31 பதவிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. சனிக்கிழமை வரை 24 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இதில், மாவட்ட கவுன்சிலா் பதவிக்கு ஒருவரும், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகளுக்கு 8 பேரும், வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 15 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனா். வேட்பு மனு தாக்கல் செய்ய திங்கள்கிழமை கடைசி நாளாகும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT