கடலூர்

நெய்வேலியில் சிறப்பு தூய்மைப் பணி

26th Jun 2022 06:33 AM

ADVERTISEMENT

 

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில் நெய்வேலி நகரியப் பகுதியில் சிறப்பு தூய்மைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு என்எல்சி தலைவா் ராகேஷ்குமாா் தலைமை வகித்தாா். நிறுவன இயக்குநா்கள் ஷாஜிஜான், மோகன் ரெட்டி, செயல் இயக்குநா்கள் என்.சதீஷ்பாபு, ஆா்.மோகன், உயா் அதிகாரிகள், தொழிற்சங்க நிா்வாகிகள், வியாபாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனா். நெய்வேலி நகரியத்தை 18 மண்டலங்களாகப் பிரித்து சிறு, சிறு குழுக்களாக தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT