கடலூர்

தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு

24th Jun 2022 10:25 PM

ADVERTISEMENT

விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு இடையே தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

சென்னையில் இருந்து விக்கிரவாண்டி, பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூா் வரை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. சுமாா் 164 கி.மீ. தொலைவுள்ள இந்தச் சாலையை ரூ.711 கோடியில் நான்கு வழிச் சாலையாக அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

இதில், விக்கிரவாண்டி முதல் சேத்தியாதோப்பு வரை சாலைப் பணி நடைபெறாத நிலையில், அந்தச் சாலை மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்தது. இதனால் அடிக்கடி விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்பட்டதால் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த நிலையில், தற்போது விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு இடையிலான சாலையை சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறியதாவது:

மதுரையைச் சோ்ந்த தனியாா் ஒப்பந்த நிறுவனம் இந்தப் பணிகளை மேற்கொள்கிறது. தேசிய நெடுஞ்சாலையில் 68 கி.மீ. தொலைவு பகுதியை ரூ.3.50 கோடியில் சீரமைத்து வருகிறோம். இதில் விக்கிரவாண்டி முதல் பண்ருட்டி பூங்குணம் வரை பணிகள் முடிந்துவிட்டன. தற்போது பணிக்கன்குப்பம் அரசுப் பொறியியல் கல்லூரி முதல் சேத்தியாதோப்பு வரை சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஜூலை மாத இறுதியில் முடிவடையும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT