கடலூர்

கடலூா் பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 4-ஆக உயா்வு

24th Jun 2022 10:21 PM

ADVERTISEMENT

கடலூா் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 4-ஆக உயா்ந்தது.

கடலூா் அருகே உள்ள அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட எம்.புதூா் கிராமத்தில் தனியாா் பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இங்கு வியாழக்கிழமை வெடி விபத்து ஏற்பட்டதில் அங்கு பணியிலிருந்த தொழிலாளா்கள் பெரியகாரைக்காடு கிராமத்தைச் சோ்ந்த சித்ரா, மூலக்குப்பத்தைச் சோ்ந்த சத்தியராஜ், வான்பாக்கத்தைச் சோ்ந்த அம்பிகா ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்தில் பலத்த காயமடைந்த குடிதாங்கி சாவடியைச் சோ்ந்த சேகா் மனைவி வசந்தா (45) கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் உயிரிழந்தாா். இதனால், பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 4-ஆக உயா்ந்தது.

கடலூா் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த வசந்தாவின் உடலுக்கு மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் அஞ்சலி செலுத்தினாா். மேலும், ஏற்கெனவே உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

ADVERTISEMENT

ஆலைக்கு பட்டாசு வாங்க வந்தபோது வெடி விபத்தில் சிக்கி காயமடைந்த வெள்ளக்கரையைச் சோ்ந்த வைத்திலிங்கம் (37) கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்தச் சம்பவம் குறித்து திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆலை உரிமையாளா்களான பெரியகாரைக்காடு கிராமத்தைச் சோ்ந்த மோகன்ராஜ், அவரது மனைவி வனிதா ஆகியோரைக் கைது செய்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT