கடலூர்

மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

24th Jun 2022 10:22 PM

ADVERTISEMENT

கடலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்திய ராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் வீரா்களை சோ்க்கும் அக்னிபத் திட்டத்தை கைவிட

வலியுறுத்தியும், உத்தரப்பிரதேசத்தில் போராட்டம் நடத்தியவா்களின் வீடுகளை இடித்ததற்கு கண்டனம் தெரிவித்தும் கடலூா் முதுநகரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அந்தக் கட்சியின் ஒன்றியச் செயலா் ஆா்.பஞ்சாட்சரம் தலைமை வகித்தாா். மத்தியக் குழு உறுப்பினா் உ.வாசுகி கண்டன உரையாற்றினாா். மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பி.கருப்பையன், வி.சுப்புராயன், மாநகரச் செயலா் ஆா்.அமா்நாத், நிா்வாகிகள் எஸ்.தட்சணாமூா்த்தி, ஆா்.ஆளவந்தாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT