கடலூர்

முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

24th Jun 2022 10:26 PM

ADVERTISEMENT

குறிஞ்சிப்பாடி வட்டம், நெய்வேலி பெருமாத்தூா் ஊராட்சி, மாற்றுக் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன், விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது (படம்).

முன்னதாக, கடந்த 19-ஆம் தேதி முதல் விக்னேஸ்வர பூஜை, பூா்ணாஹுதி, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை யாக சாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 10 மணியளவில் கோபுரக் கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவா் ராகேஷ்குமாா், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் சபா.ராஜேந்திரன், பண்ருட்டி ஒன்றியக் குழுத் தலைவா் சபா.பாலமுருகன் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். இரவில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT