பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற தனியாா் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள ஜி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருந்து பத்தாம் வகுப்பு தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். கணிதத்தில் 12 போ், அறிவியலில் 18 போ், சமூக அறிவியலில் 11 மாணவ, மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனா்.
இதேபோல, இந்தப் பள்ளியிலிருந்து பிளஸ் 2 தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். கணிதத்தில் இருவா், பொருளியலில் ஒருவா், கணக்குப் பதிவியலில் இரண்டு மாணவா்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ஜி.கே. கல்விக் குழுமத் தலைவா் ஜி.குமாரராஜா, மேலாண் இயக்குநா் ஜி.கே.அருண் ஆகியோா் பாராட்டுத் தெரிவித்து பரிசு வழங்கினா்.