கடலூர்

அதிமுக நிா்வாகிகள் கூட்டம்

19th Jun 2022 01:15 AM

ADVERTISEMENT

 

அதிமுக சாா்பில் கம்மாபுரம் வடக்கு ஒன்றியம், கெங்கைகொண்டான் பேரூராட்சி நிா்வாகிகள் கூட்டம் மந்தாரக்குப்பத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மனோகரன் தலைமை வகித்தாா். ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் உமா மகேஸ்வரன், மாவட்ட துணைச் செயலா் ரவிச்சந்திரன், ஒன்றியச் செயலா் சின்னரகுராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சிறப்பு அழைப்பாளராக புவனகிரி தொகுதி எம்எல்ஏ ஆ.அருண்மொழிதேவன் பங்கேற்றுப் பேசுகையில், அதிமுகவை வழிநடத்த ஒற்றைத் தலைமை கோரிக்கையை நாங்கள் முன்வைத்தோம். எடப்பாடி பழனிசாமியின் பின்னணியில் அனைவரும் திரள வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT