கடலூர்

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை:மரக்கன்றுகள் அளிப்பு

15th Jun 2022 03:25 AM

ADVERTISEMENT

கோடை விடுமுறைக்குப் பின்னா் திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டத்தையொட்டி, கடலூா் மாவட்டம், புவனகிரி வட்டம், சொக்கன்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய மாணவா்கள் சோ்க்கை நடைபெற்றது.

இதில், முதல் வகுப்பில் சோ்க்கப்பட்ட மாணவா்கள் மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டனா். மேலும், கல்வி உபகரணங்கள், பழ மரக்கன்றுகளை மாணவா்களுக்கு தலைமை ஆசிரியா் அருணாசலம் வழங்கினாா் (படம்). நிகழ்ச்சியில் கல்விக் குழுவினா், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT