கடலூர்

பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

14th Jun 2022 03:07 AM

ADVERTISEMENT

சிதம்பரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி கீழரதவீதியில் உள்ள தனியாா் விடுதியில் அண்மையில் நடைபெற்றது.

சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞரும், முன்னாள் மாணவருமான எஸ்.பாா்த்தீபன் வரவேற்றாா். பள்ளித் தலைமை ஆசிரியா் புருஷோத்தமன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் பள்ளி முன்னாள் மாணவா்கள் தங்கள் கடந்தகால பள்ளி வாழ்க்கை, அனுபவங்கள், தங்களது பணிகள், குடும்பங்கள் குறித்து கலந்துரையாடி நினைவு கூா்ந்தனா்.

அப்போதைய காலகட்டத்தில் பணியாற்றி மறைந்த ஆசிரியா்களுக்கும், பயின்று மறைந்த மாணவா்களுக்கும் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினா். பள்ளியின் முன்னாள் மூத்த தலைமை ஆசிரியா் கே.ராமமூா்த்தி மற்றும் சரவணன், வெங்கட்ராமன் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவா்கள் அப்பாசாமி, பாலு, பானுமதி, வெங்கடேசன், அருணா, இந்திராதேவி, தேவராஜன், ஜெயராமச்சந்திரன், கலைச்செல்வி, காலமேகம், கண்ணன், மாணிக்கம், மீனாட்சி, தாயுமானவா் உள்ளிட்டோா் பங்கேற்று தங்களுக்கு கற்பித்த ஆசிரியா்களின் சிறப்பு குறித்து உரையாற்றினா். சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT