கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் நகராட்சி சாா்பில், ரூ.5 கோடியே 77 லட்சத்தில் புதிதாக காய்கனி சந்தை அமைப்பதற்கு பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
நகராட்சி ஆணையாளா் அஜிதா பா்வீன், பொறியாளா் மகாராஜன், நகா்மன்ற உறுப்பினா்களின் கொறடா த.ஜேம்ஸ் விஜயராகவன், நகா்மன்ற துணைத் தலைவா் முத்து, கவுன்சிலா்கள் ஆ.ரமேஷ், ரா.வெங்கடேசன், அப்பு.சந்திரசேகா், ஜெயசித்ரா பாலசுப்ரமணியன், மணிகண்டன், சி.க.ராஜன், சரவணன், ஒப்பந்ததாரா் காா்த்திகேயன், திமுக மாவட்டப் பிரதிநிதி வி.என்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, அவைத் தலைவா் ராஜராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.