கடலூர்

7 பெண்களின் குடும்பத்துக்கு கூடுதல் நிவாரணம் வழங்க பாமக வலியுறுத்தல்

10th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

கடலூா் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பெண்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு கூடுதல் நிவாரண நிதி வழங்க வேண்டுமென பாமக வலியுறுத்தியது.

இதுகுறித்து கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியத்திடம் கடலூா் வடக்கு மாவட்ட பாமக செயலா் கோ.ஜெகன் அண்மையில் நேரில் அளித்த மனு:

ஏ.குச்சிப்பாளையத்தில் கெடிலம் ஆற்றில் மூழ்கி சிறுமிகள் உள்பட 7 பெண்கள் அண்மையில் உயிரிழந்தனா். மக்களின் பயன்பாடு அதிகமுள்ள நீா் ஆதாரப் பகுதிகளில் மணல் எடுக்கும்போது உரிய நெறிமுறைகளை கடைப்பிடிக்காததே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம். எனவே, உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்துக்கு தமிழக அரசு கூடுதலாக ரூ.20 லட்சம் நிவாரண நிதியும், உயிரிழந்தவா்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணியும் வழங்க வேண்டும் என அதில் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT