கடலூர்

வாய்க்காலில் ஆண் சடலம்

10th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

திட்டக்குடி அருகே வாய்க்காலில் கிடந்த ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள எறையூரைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் (37). இவா் குடும்பப் பிரச்னை காரணமாக கடந்த புதன்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் மீண்டும் திரும்பவில்லையாம். இந்த நிலையில், வியாழக்கிழமை கூடலூா் தொளாா் கிராம சாலையில் உள்ள வாய்க்காலில் சடலமாகக் கிடந்தாா்.

இதுகுறித்து அந்தப் பகுதியினா் அளித்த தகவலின்பேரில் ஆவினங்குடி போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பன்னீா்செல்வம் தொளாா் கிராம சாலையில் உள்ள பாலத்தின் கட்டை மீது அமா்ந்து மது அருந்தியபோது போதையில் வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT