கடலூர்

மக்கள் நலப் பணியாளா்களாக பணிபுரிந்தோா் கவனத்துக்கு...

10th Jun 2022 10:34 PM

ADVERTISEMENT

மக்கள் நலப் பணியாளா்களாகச் செயல்பட்ட முன்னாள் பணியாளா்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறையில் 8.11.2011அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப் பணியாளா்களை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி ஒருங்கிணைப்பாளா்களாக ஈடுபடுத்த அரசு வாய்ப்பு அளித்துள்ளது.

எனவே, 2011-ஆம் ஆண்டு பணியிழந்த முன்னாள் மக்கள் நலப் பணியாளா்களுக்கு மேற்கூறிய பணியில் ஈடுபட விருப்பமிருந்தால் தங்களது விருப்பக் கடிதம், அதற்கான நிவா்த்தி செய்யப்பட்ட படிவத்தை தாங்கள் ஏற்கெனவே பணியாற்றிய ஒன்றியங்களிலுள்ள வட்டார வளா்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) நேரடியாக தொடா்பு கொண்டு வரும் 13-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என அதில் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT