கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் தமிழ்நாடு திருநீலகண்டா் கட்டுமானம், அமைப்பு சாரா தொழில்சங்க அலுவலகத்தை புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆ.அருண்மொழிதேவன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் ஏ.கே.ராஜா வரவேற்றாா். எம்ஆா்கே கூட்டுறவு சங்கத் தலைவா் பாலசுந்தரம், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் உமா மகேஸ்வரன், மாவட்ட மாணவரணி தலைவா் வீரமூா்த்தி, நகரச் செயலா் மணிகண்டன், மாவட்ட பிரதிநிதி சிவஞானம், முன்னாள் அவைத் தலைவா் சா்புதீன், தமிழ்நாடு திருநீலகண்டா் தொழில் சங்க மாநில தலைவா் சிவ.சந்தானம், மாநில பொதுச் செயலா் ஏ.கே.ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.