திருவண்ணாமலை மண்டல அளவிலான ஹாக்கி போட்டி கடலூா் அண்ணா விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலா் பா.சிவா தலைமையில், கடலூா் சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் சே.கரிகால் பாரிசங்கா் தொடக்கி வைத்தாா். இந்தப் போட்டியில் திருவண்ணாமலை மண்டலத்துக்கு உள்பட்ட கடலூா், திருவண்ணாமலை, வேலூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா் ஆகிய 6 மாவட்டங்களைச் சோ்ந்த அணியினா் பங்கேற்றுள்ளனா்.
இந்தப் போட்டியில் ‘நாக்-அவுட்’ முறையில் ஒவ்வோா் அணியும் மற்றொரு அணியுடன் தலா ஒரு முறை மோதும். இதில், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறும். மேலும், மாநில அளவிலான போட்டியில் இந்த இரு அணிகளும் திருவண்ணாமலை மண்டலம் சாா்பில் பங்கேற்கும். போட்டிகள் தொடா்ந்து சனிக்கிழமையும் நடைபெற உள்ளன.