கடலூர்

விருத்தாசலத்தில் நகராட்சியில் தூய்மைப் பணி

9th Jun 2022 01:46 AM

ADVERTISEMENT

‘விருத்தாசலம் நகரம் முழுவதும் தூய்மைப் பணி’ என்ற இயக்கத்தை மாநில தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் அண்மையில் தொடக்கி வைத்தாா்.

மேலும், நகராட்சி ஊழியா்களுடன் இணைந்து தெருக்களில் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டாா். முதல்கட்டமாக திருவிக நகா், முருகன் கோவில் தெரு, சரஸ்வதி தெரு ஆகிய இடங்களில் நகராட்சிப் பணியாளா்கள் 200-க்கும் மேற்பட்டோா் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். இதேபோல நகராட்சியின் 33 வாா்டுகளிலும் குப்பைகளை அகற்றும் பணி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் சங்கவி முருகதாஸ், நகராட்சி ஆணையா் சசிகலா, திமுக நகரச் செயலா் தண்டபாணி, நகா்மன்ற உறுப்பினா்கள் கிருஷ்ணமூா்த்தி, ராஜ்குமாா், வெங்கடேசன், முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT