சிதம்பரம் தில்லை திருப்புகழ் சபையின் 70-ஆவது ஆண்டு விழா காசுக்கடைத் தெரு மரகத சித்தி விநாயகா் கோயில் வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு சபைத் தலைவா் எஸ்.ஆா்.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தாா். செயலா் எஸ்.ஆா்.திருநாவுக்கரசு முன்னிலை வகித்தாா். தமிழாசிரியா் மு. கல்யாணராமன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக தி. பொன்னம்பலம் கலந்துகொண்டு திருவிளையாடல் புராணம் தொடா் சொற்பொழிவை நிறைவு செய்து சிறப்புரை ஆற்றினாா்.
நிகழ்ச்சியில் தமிழறிஞா்கள் தி.பொன்னம்பலம், அ.முத்துக்குமாரசாமி, நா. புகழேந்தி, பா.செல்வம், ஆ.வேம்பு, வெ.சிவரஞ்சனி, குமாரராஜா உள்ளிட்டோருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பா. காா்த்திகேயன் நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் தொழிலதிபா்கள் எஸ். பாலச்சந்திரன், ஆா். சரவணன், எஸ். கலைச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.