கடலூா் மாவட்டத்திலுள்ள 10 வட்டங்களிலும் வருவாய்த் தீா்வாயம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
கடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கடலூா் வட்டத்துக்கான வருவாய்த் தீா்வாயத்தை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். இதேபோல, சிதம்பரம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, காட்டுமன்னாா்கோவில், விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூா், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய வட்டங்களிலும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனா்.
கடலூா் வட்டத்தில் முதல்நாளில் திருவந்திபுரம் குறுவட்டம் அளவிலான வருவாய் தீா்வாயம் நடைபெற்றது. இதில், 85 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டதில் 3 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.