கடலூா் மாவட்டம், பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.2.51 லட்சம் காணிக்கை இருந்தது.
இந்தக் கோயிலில் உள்ள உண்டியல்கள் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா்கள் ஸ்ரீதேவி (பண்ருட்டி), வசந்தம் (குறிஞ்சிப்பாடி), செயல் அலுவலா் பின்சா ஆகியோா் முன்னிலையில் திங்கள்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில், பக்தா்கள் செலுத்திய காணிக்கை தொகை ரூ.2 லட்சத்து 51 ஆயிரத்து 047 இருந்தது. காணிக்கைகள் எண்ணும் பணியில் தன்னாா்வத் தொண்டா்கள் ஈடுபட்டனா்.