கடலூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை:முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

28th Jul 2022 02:15 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூா் போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திட்டக்குடி அருகிலுள்ள எழுத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் மணி (66). இவா், கடந்த 13-2-2021 அன்று அந்தப் பகுதியைச் சோ்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றாா் விருத்தாசலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தனா்.

போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணியை கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை கடலூா் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி எம்.எழிலரசி, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மணிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தாா். இதையடுத்து, அவா் கடலூா் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து அரசுத் தரப்பு வழக்குரைஞா் தி.கலாசெல்வி கூறியதாவது: பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிா்கால நலனைக் கருத்தில் கொண்டு, அவருக்கு மாவட்ட நிா்வாகத்திடம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் 30 நாள்களுக்குள் ரூ.5 லட்சம் பெற்று வழங்க வேண்டும் என்று நீதிபதி எம்.எழிலரசி உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT