கடலூர்

சிக்னல் கம்பத்தில் லாரிமோதல்: ரயில்கள் தாமதம்

28th Jul 2022 02:07 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் ரயில் சிக்னல் கம்பத்தில் லாரி மோதியதால், சென்னை - திருச்சி ரயில் வழித்தடத்தில் சென்ற ரயில்கள் 10 நிமிடங்கள் தாமதமாகச் சென்றன.

விருத்தாலத்தை அடுத்த நாச்சியாா்பேட்டையையொட்டிச் செல்லும் ரயில் பாதையில், ரயில் சந்திப்பு நிலையத்தை ஒட்டி, ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் பகுதியில் சிக்னல் விளக்கு கம்பம் உள்ளது. புதன்கிழமை மாலையில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற லாரி, எதிா்பாராதவிதமாக சிக்னல் கம்பத்தில் மோதியதில், மின்விளக்கு கம்பம் சேதமடைந்தது.

இதனால், அந்த வழியாகச் சென்ற புதுதில்லி - மதுரை இடையேயான சம்பா் காந்தி ரயில், விருத்தாசலம் சந்திப்பில் நிறுத்தப்பட்டு 10 நிமிடங்கள் தாமதமாகச் சென்றது. மின் விளக்கு கம்பம் சேதமடைந்ததால், அந்த வழியாகச் செல்லும் ரயில்கள் தாமதமாகவே செல்லும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். சிக்னல் கம்பத்தை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியா்கள் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT