கடலூர்

பேருந்து மோதியதில் தொழிலாளி பலி

27th Jul 2022 04:27 AM

ADVERTISEMENT

நெய்வேலியில் என்எல்சி பேருந்து-பைக் மோதிக்கொண்ட விபத்தில் கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

நெய்வேலி அருகே உள்ள ஓடைதாண்டவன்குப்பம், காமராஜா் நகரைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் பழனிவேல் (45). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேகா. இவா்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனா். பழனிவேல் செவ்வாய்க்கிழமை மாலை பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். என்எல்சி அனல் மின்நிலையம்-2 பங்கா் அருகே சென்றபோது

அந்த வழியாக வந்த என்எல்சி பேருந்தும் பைக்கும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பழனிவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த அவரது உறவினா்கள் முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றனா்.

ADVERTISEMENT

அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், பழனிவேலின் உடலை மீட்டு கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT