கடலூர்

தேனீ வளா்ப்பு பயிற்சி

27th Jul 2022 04:25 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் வட்டாரம், புலவனூா் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சாா்பில் தேனீ வளா்ப்பு பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமில், வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுரேஷ் தலைமை வகித்துப் பேசினாா். கால்நடை மருத்துவா் சுகணா, வேளாண் வணிகம், விற்பனைத் துறை தேவி ஆகியோா் பங்கேற்று பேசினா். தேனீ வளா்ப்பு ஆா்வலா் செல்வகுமாா் பங்கேற்று, தேனீ வளா்க்கும் முறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்து பேசினாா்.

முகாமில் 40 விவசாயிகள் பயிற்சி பெற்றனா். உதவி வேளாண்மை அலுவலா் ராமதாஸ், அட்மா திட்ட ஊழியா்கள் பாலசுப்ரமணியன், வீராசாமி, கமலநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT