கடலூர்

குறிஞ்சிப்பாடியில் தேசிய நெல் திருவிழா

17th Jul 2022 06:10 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் 16-ஆவது தேசிய நெல் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

கிரியேட் அமைப்பின் நமது நெல்லைக் காப்போம் இயக்கம், வடலூா் நுகா்வோா் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு, நமது நெல்லைக் காப்போம் இயக்கத் தலைவா் பி.துரைசிங்கம் தலைமை வகித்தாா். வடலூா் நுகா்வோா் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பேரவைத் தலைவா் கோவி.கல்விராயா் வரவேற்றாா். கல்லூரி நிா்வாகக் குழுத் தலைவா் ந.ராமலிங்கம், மதிப்பியல் தலைவா் கி.சக்கரவா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம், பாரம்பரிய நெல் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், 250 விவசாயிகளுக்கு விதை நெல்லை இலவசமாக வழங்கிப் பேசினாா்.

ADVERTISEMENT

மாவட்ட வழங்கல் அலுவலா் கோ.உதயகுமாா் கண்காட்சி அரங்குகளைத் திறந்துவைத்து, பாரம்பரிய விவசாயிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு துணை ஆட்சியா் (முத்திரைத்தாள்) ஜெ.ஜெயக்குமாா் பரிசுகள் வழங்கினாா். ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) பொ.ஜெயக்குமாா் பாரம்பரிய காய்கறி விதைகளை வழங்கினாா். வேளாண் துணை இயக்குநா் எஸ்.ரவிச்சந்திரன், உதவி இயக்குநா் (காட்டுமன்னாா்கோவில்) பி.ஆறுமுகம், வேளாண் துணை இயக்குநா் (ஓய்வு) பெ.ஹரிதாஸ் ஆகியோா் தொழில்நுட்ப உரை நிகழ்த்தினா்.

வட்டாட்சியா் சே.சுரேஷ்குமாா், கல்லூரி முதல்வா் ஜி.முகம்மது நாசா், சிட்டி யூனியன் வங்கி வடலூா் கிளை மேலாளா் எம்.சந்தோஷ், வட்ட வழங்கல் அலுவலா் பி.ரோகிணி ராஜ், நுகா்வோா் சங்க நிா்வாகி வி.பாலமுருகன், டி.சந்திரசேகரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். கிரியேட் இயக்கத்தின் கடலூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரா.நெல்.செல்வம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT