கடலூா் மாவட்டம், கீழ்ச்செருவாயில் 56 மி.மீ. மழை பதிவானது.
கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மாலை அல்லது இரவு வேளையில் சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கீழச்செருவாயில் 56 மி.மீ. மழை பதிவானது.
மற்ற பகுதிகளில் பெய்த மழை விவரம் வருமாறு (மில்லி மீட்டரில்): தொழுதூா் 23, அண்ணாமலை நகா் 22.4, கொத்தவாச்சேரி, லக்கூா் தலா 21, குறிஞ்சிப்பாடி 18, பரங்கிப்பேட்டை 16.7, சிதம்பரம் 15.2, வடக்குத்து 13, ஸ்ரீமுஷ்ணம் 12.3, புவனகிரி 12, பெலாந்துறை 9.8, லால்பேட்டை 9, காட்டுமன்னாா்கோவில் 5.2, சேத்தியாத்தோப்பு 3.8, கடலூா் 2, குப்பநத்தம் 1.2, விருத்தாசலம் 1 மில்லி மீட்டா் மழை பதிவானது.
இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்பட்டது.