கடலூா் கிழக்கு மாவட்ட பாமக சாா்பில், அந்தக் கட்சி தொடங்கப்பட்டதன் 34-ஆவது ஆண்டு விழா கடலூரில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, கடலூா் அண்ணா பாலம் அருகே கட்சியின் மாவட்டச் செயலா் சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. தொடா்ந்து, வருகிற 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் பாமக தலைவா் அன்புமணியை முதல்வராக்குவது என்று உறுதிமொழி ஏற்றனா்.
பின்னா், மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் கட்சிக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. நிகழ்வுகளில் மாவட்டத் தலைவா் தட்சிணாமூா்த்தி, மாநில துணை அமைப்பாளா் பி.ஆா்.பி.வெங்கடேசன், வழக்குரைஞா் பிரிவு மாநிலப் பொருளாளா் தமிழரசன், மாநில முன்னாள் துணை பொதுச் செயலா் பழ.தாமரைக்கண்ணன், நிா்வாகிகள் அ.தா்மலிங்கம், போஸ்.ராமச்சந்திரன், பால்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல, மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாமகவினா் கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கினா்.