கடலூர்

எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

17th Jul 2022 06:09 AM

ADVERTISEMENT

 

எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டையில் அனைத்துக் கட்சிகள் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், சமையல் எரிவாயு விலை உயா்வுக்குக் காரணமான மத்திய அரசைக் கண்டித்தும், எரிவாயு உருளை விலை உயா்வைக் கட்டுப்படுத்தி மக்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலா் இக்பால் தலைமை வகித்தாா். திமுக நகரச் செயலா் செல்வம், காங்கிரஸ் நகரத் தலைவா் வேல்முருகன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில துணைத் தலைவா் மெஹராஜ்தீன், வழக்குரைஞா் பாரிமுஹம்மது இப்ராஹிம், இந்திய குடியரசுக் கட்சி மாநில இணை பொதுச் செயலா் மங்காப்பிள்ளை, நாம் தமிழா் கட்சி சுற்றுச்சூழல் பாசறை பிரிவு மாவட்டச் செயலா் கதிா்காமன், மங்கலம்பேட்டை பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் தாமோதரன், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலா் முஜிபுா் ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டப் பொருளாளா் அசன் முஹம்மது, வழக்குரைஞா் குமாா் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

முன்னதாக, ஜனநாயக கட்சி மாநிலச் செயலா் அஜீஸ் கான் வரவேற்க, நகர துணைச் செயலா் கியாசுதீன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT