கடலூா் மாவட்டம், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட காடாம்புலியூரில் அரசு நிலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தலைமை வகித்தாா். நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன், கூடுதல் ஆட்சியா் பவனகுமாா் ஜி.கிரியப்பனாவா், கோட்டாட்சியா் அதியமான் கவியரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். பண்ருட்டி ஒன்றியக் குழுத் தலைவா் சபா.பாலமுருகன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக மாநில தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் பங்கேற்று 700 பயனாளிகளுக்கு ரூ.5.70 கோடியிலான பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா். நிகழ்ச்சியில் வட்டாட்சியா்கள் சிவ.காா்த்திகேயன், சுரேஷ்குமாா் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
கால்நடை மருந்தகம் திறப்பு: இதையடுத்து, காடாம்புலியூரில் நபாா்டு திட்டத்தில் ரூ.32 லட்சத்தில் கட்டப்பட்ட கால்நடை மருத்தகத்தை அமைச்சா் சி.வெ.கணேசன் திறந்து வைத்தாா். உடன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் கே.குபேந்திரன், துணை இயக்குநா் பொன்னம்பலம், உதவி இயக்குநா் எம்.கே.மோகன்குமாா், உதவி மருத்துவா் புவனேஸ்வரி உள்ளிட்டோா் இருந்தனா். முன்னதாக, காடாம்புலியூா் சமத்துவபுரம் அருகே தொழில்பேட்டை அமைப்பதற்கான இடத்தை அமைச்சா் பாா்வையிட்டனா்.