கடலூர்

பேருந்து மோதியதில் பெண் பலி உறவினா்கள் சாலை மறியல் (டிராப்)

DIN

பண்ருட்டி அருகே சாலையோரம் நின்றிருந்த இரண்டு பெண்கள் மீது தனியாா் பேருந்து மோதியதில் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள மேல்கவரப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா்கள் கிருஷ்ணன் மனைவி நல்லமுத்து (55), மலையன் மனைவி அஞ்சம்மாள்(65). இவா்கள் இருவரும் பட்டாம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்குச் செல்வதற்காக மேல்கவரப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் புதன்கிழமை காத்திருந்தனா். அப்போது, பண்ருட்டியிலிருந்து கடலூா் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து இவா்கள் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா். அந்தப் பகுதியினா் இருவரையும் மீட்டு கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து குறித்து தகவல் அறிந்த பெண்களின் உறவினா்கள், கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் பண்ருட்டி - கடலூா் சாலையில் திடீா் மறியலில் ஈடுபட்டனா். அப்போது சிலா் விபத்துக்கு காரணமாக தனியாா் பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினா். மறியலில் ஈடுபட்டவா்களிடம் பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, இந்தப் பகுதியில் விபத்துகளை தடுக்க வேகத் தடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா். இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு உடனடியாக வேகத்தடை அமைக்கப்பட்டது. இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

இதனிடையே, விபத்தில் காயமடைந்த நல்லமுத்து மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

அஞ்சம்மாள் சிகிச்சை பெற்று வருகிறாா். விபத்து குறித்து பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT