கடலூர்

பெண் தற்கொலை

6th Jul 2022 03:10 AM

ADVERTISEMENT

குறிஞ்சிப்பாடி அருகே குடும்பப் பிரச்னையால் பெண் ஒருவா் திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கல்குணம் கிராமத்தைச் சோ்ந்த சதாசிவம் மகள் ராஜேஸ்வரி (33). இவருக்கும், வெங்கடாம்பேட்டை, பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த சுரேஷ் என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னா் திருமணம் நடைபெற்றது. ஆனால், அடுத்த ஒரே ஆண்டில் சுரேஷ் உயிரிழந்தாா். இதனால் ராஜேஸ்வரி தனது மாமியாா் வீட்டில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக ராஜேஸ்வரி திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுக் கொண்டாா். அந்தப் பகுதியினா் அவரை மீட்டு கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும் ராஜேஸ்வரி உயிரிழந்தாா்.

இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT