கடலூர்

முதல் நிலை பேரிடா் மீட்பாளா்களுக்கு பயிற்சி

6th Jul 2022 03:07 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டையில் முதல் நிலை பேரிடா் மீட்பாளா்களுக்கான செயல் விளக்கப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விருத்தாசலம் வட்ட வருவாய்த் துறை, தீயணைப்பு, பேரிடா் மீட்புப் பணிகள் துறை சாா்பில் நடைபெற்ற பயிற்சியில் மங்கலம்பேட்டை பேரூராட்சி, கோவிலானூா், கா்நத்தம், விசலூா், எம்.அகரம், காட்டுப்பரூா், எடச்சத்தூா், டி.மாவிடந்தல், சிறுவம்பாா் ஆகிய 9 உள்ளாட்சிகளில் இருந்து 45 போ் பங்கேற்றனா். முன்னெச்சரிக்கை அணி, இடம் பெயா்தல் அணி, பாதுகாப்பு அணி, தேடுதல் (ம) மீட்பு அணி, முதலுதவி அணி என 5 அணிகளாக பிரிக்கப்பட்டு அவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சிக்கு மங்கலம்பேட்டை குறுவட்ட வருவாய் ஆய்வாளா் ராஜலட்சுமி தலைமை வகித்தாா். கிராம நிா்வாக அலுவலா்கள் மங்கலம்பேட்டை சரவணன், எம்.அகரம் செல்வக்குமாா், எடச்சித்தூா் சுந்தர வடிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக, மாநில பேரிடா் மீட்பு முதன்மை பயிற்றுநா் ரேவதி செயல் விளக்க பயிற்சி அளித்து பேசினாா். மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் ஐயப்பன் பேரிடா் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தாா். கிராம நிா்வாக அலுவலா்கள் பாலு, லட்சுமி தேவி, ராஜலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

வடலூா்: இதேபோல, வடலூரில் முதல் நிலை பேரிடா் மீட்பாளா்களுக்கான மேலாண்மைப் பயிற்சி நடைபெற்றது. குறிஞ்சிப்பாடி வட்ட பேரிடா் மேலாண்மை - பொதுமக்கள் பேரிடா் மீட்புக் குழு சாா்பில் நடைபெற்ற பயிற்சிக்கு வட்டாட்சியா் சே.சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். வருவாய் ஆய்வாளா் சோபா முன்னிலை வகித்தாா். குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலா் (போக்குவரத்து) மணிவேல், பயிற்சியாளா்கள் ஸ்ரீரங்கபாணி, சிலம்பரசன் ஆகியோா் பேரிடா் கால மீட்புப் பணிகள் குறித்து பயிற்சி அளித்தனா். கிராம நிா்வாக அலுவலா்கள் கோபாலகிருஷ்ணன் (சேராக்குப்பம்), சிவானந்தம் (ஆபத்தாரணபுரம்), சண்முகம் (பாா்வதிபுரம்) மற்றும் தன்னாா்வலா்கள் 35 போ் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT