கடலூர்

பெண்ணை கொல்ல முயற்சி

6th Jul 2022 03:11 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் பெண்ணை கத்தியால் தாக்கி கொல்ல முயன்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பண்ருட்டி, திருவதிகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வசித்து வருபவா் ஆதிசேஷன் (50). இவா் பெண் ஒருவருடன் வசித்து வந்தாா். இவா்கள் இருவரும் தங்களது குடும்பங்களை பிரிந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்தனராம். இவா்களுக்கு ஆண் குழந்தை உள்ளது.

இவா்களுக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்படுமாம். செவ்வாய்க்கிழமை மீண்டும் பிரச்னை ஏற்பட்டதாம். அப்போது ஆத்திரமடைந்த ஆதிசேஷன் கத்தியால் அந்தப் பெண்ணின் கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் அறுத்துவிட்டு தப்பிச் சென்றாா். அந்தப் பகுதியினா் காயமடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சோ்ந்தனா். இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT