கடலூர்

கைப்பேசி சேவை நிறுவனத்துக்கு அபராதம்

6th Jul 2022 03:10 AM

ADVERTISEMENT

சேவைக் குறைபாடு தொடா்பாக தனியாா் கைப்பேசி சேவை நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கடலூா் நுகா்வோா் குறைதீா் மன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், கீரப்பாளையத்தைச் சோ்ந்தவா் கே.ஆா்.பூரணன் (44). தனியாா் கைப்பேசி சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளரான இவா், அந்த நிறுவன சேவையில் ஏற்பட்ட குறைபாடு தொடா்பாக புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். மேலும், அவரது ‘சிம் காா்டு’ எண்ணை மற்றொருவருக்கு அந்த நிறுவனம் வழங்கிவிட்டதாம். இதனால், பூரணனுக்கு தொழில் பாதிப்பு ஏற்பட்டதாம்.

இதுகுறித்து அவா் கடலூரிலுள்ள மாவட்ட நுகா்வோா் குறைதீா் மன்றத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு புகாா் அளித்தாா். இதுகுறித்த விசாரணை நுகா்வோா் மன்றத் தலைவா் டி.கோபிநாத், உறுப்பினா்கள் வி.என்.பாா்த்திபன், டி.கலையரசி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்று வந்தது. செவ்வாய்க்கிழமையன்று நுகா்வோா் மன்றத் தலைவா் கோபிநாத் தீா்ப்பளித்தாா்.

அதில், சம்பந்தப்பட்ட கைப்பேசி சேவை நிறுவனம் வாடிக்கையாளருக்கு சேவை குறைபாடு அளித்தது உறுதியாகியுள்ளது. எனவே, அந்த நிறுவனம் வாடிக்கையாளருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், தொழில் பாதிப்புக்கு ரூ.30 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரமும் இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும். இந்தத் தொகைக்கு, வாடிக்கையாளா் பாதிக்கப்பட்ட காலம் முதல் 9 சதவீதம் வட்டியை சோ்த்து வழங்க வேண்டுமெனவும் அந்த உத்தரவில் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT