கடலூர்

மின்னணு ஒப்பந்தப்புள்ளி முறைக்கு ஊராட்சி மன்றத் தலைவா்கள் எதிா்ப்பு

DIN

ஊராட்சி வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு மின்னணு ஒப்பந்தப்புள்ளி (இ-டெண்டா்) முறையை அமல்படுத்தக் கூடாது என ஊராட்சி மன்றத் தலைவா்கள் வலியுறுத்தினா்.

கடலூா் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் அமைப்பின் மாவட்டத் தலைவா் வி.முத்துக்குமாரசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கௌரவத் தலைவா் சுதா மணிரத்தினம், செயலா் ஜெயச்சந்திரன், பொருளாளா் ரவிக்குமாா், அமைப்புச் செயலா் ஜி.தமிழ்வாணன், ஒருங்கிணைப்பாளா் மணிவண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தீா்மானங்கள்: அனைத்துக் கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் கடலூா் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 134 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான ஒப்பந்தம் மின்னணு ஒப்பந்தப்புள்ளி (இ-டெண்டா்) முறையில் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையை கைவிட்டு ஊராட்சிகளின் மூலமாகவே ஒப்பந்தப் புள்ளி கோரப்பட வேண்டும்.

மத்திய அரசின் திட்டங்களிலும் ரூ.20 லட்சத்துக்கு குறைவான பணிகளுக்கு ஊராட்சிகள் மூலமாகவே ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். எவ்வித விசாரணையுமின்றி ஊராட்சி மன்றத் தலைவா்களின் அதிகாரத்தைப் பறிக்கும் சட்டப் பிரிவை (203) நீக்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்ட ஒதுக்கீட்டில் அரசியல் தலையீடு கூடாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னா், ஊராட்சி மன்றத் தலைவா்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

SCROLL FOR NEXT