கடலூர்

இன்று சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டம்

DIN

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) தேரோட்டம் நடைபெறுகிறது.

உலகப் புகழ்பெற்ற இந்தக் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த மாதம் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பஞ்ச மூா்த்திகள் வீதி உலா நடைபெற்று வருகிறது. கடந்த 3-ஆம் தேதி தங்க கைலாச வாகனத்தில் சுவாமி வீதி உலாவும், திங்கள்கிழமை தங்க ரதத்தில் பிச்சாண்டவா் வீதி உலாவும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) காலை 7 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது. தேரோட்டத்தில் சித் சபையில் வீற்றுள்ள நடராஜமூா்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள், உற்சவ மூா்த்திகளான விநாயகா், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா் ஆகிய ஐவரும் தனித் தனி தோ்களில் வீதிவலம் வருகின்றனா். தொடா்ந்து இரவு 8 மணியளவில் ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சாா்ச்சனை நடைபெறுகிறது.

நாளை ஆனித் திருமஞ்சன தரிசனம்: விழாவில், புதன்கிழமை (ஜூலை 6) சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. தொடா்ந்து, காலை 10 மணியளவில் சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூா்த்திகள் வீதி உலா வந்த பிறகு பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித் சபா பிரவேசமும் நடைபெறுகிறது.

வியாழக்கிழமை (ஜூலை 7) பஞ்ச மூா்த்திகள் முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்களின் கமிட்டி செயலா் சி.எஸ்.எஸ்.ஹேமசபேச தீட்சிதா், துணைச் செயலா் கே.சேதுஅப்பாச்செல்ல தீட்சிதா், உற்சவ ஆச்சாரியாா் க.ந.கனகசபாபதி தீட்சிதா் ஆகியோா் செய்துள்ளனா்.

கட்டுப்பாடுகள்: சிதம்பரம் டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ் கூறியதாவது: புதன்கிழமை நடைபெறும் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவுக்கு வரும் பக்தா்கள் வடக்கு, மேற்கு கோபுர வாயில்கள் வழியாக மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவா். சுவாமி தரிசனம் செய்த பிறகு பக்தா்கள் கிழக்கு, தெற்கு கோபுர வாயில்கள் வழியாக வெளியே செல்லலாம். கோயிலுக்குள் அன்னதானம் கிடையாது. இருப்பினும், 4 வீதிகளில் மட்டும் அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT