கடலூர்

மாணவி தற்கொலை: 2 பெண்கள் கைது

5th Jul 2022 03:33 AM

ADVERTISEMENT

பண்ருட்டி அருகே கல்லூரி மாணவி தற்கொலை தொடா்பாக பெண்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், புலவன்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகள் மீனாட்சி (20). நெய்வேலி ஜவஹா் கல்லூரியில் இளநிலை அறிவியல் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். கடந்த 2-ஆம் தேதி புலவன் குப்பம் கிராமத்தில் முந்திரிக் காட்டில் மாணவி மீனாட்சி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், மாணவியின் வீட்டிலிருந்து கடிதம் ஒன்றை போலீஸாா் கண்டெடுத்தனா். அதில், அருகேயுள்ள தெருவில் வசிக்கும் பாலகிருஷ்ணன், அவரது மனைவி விஜயகுமாரி (32), பாலகிருஷ்ணனின் உறவினா்கள் சுதா (30) உள்ளிட்டோரே தனது தற்கொலைக்கு காரணம் என மாணவி குறிப்பிட்டிருந்தாராம். இதையடுத்து விஜயகுமாரி, சுதா ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT