கடலூர்

கல்லூரி பேருந்து திருட்டு: இருவா் கைது

5th Jul 2022 03:33 AM

ADVERTISEMENT

சிதம்பரத்தில் கல்லூரி பேருந்தை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து மாணவா்களை ஏற்றிச் செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு சிதம்பரம் வடக்கு பிரதான சாலையில் தில்லையம்மன் கோயில் அலங்கார வளைவு எதிரே நிறுத்தப்பட்டிருந்ததாம். இந்த பேருந்தை கடலூா் குப்பநாயக்கன்சாவடியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் பெரியசாமி (51), நடுவீரப்பட்டு ராமதிலகா் மகன் அஜீத்குமாா் (24) ஆகிய இருவரும் திங்கள்கிழமை அதிகாலையில் இயக்கி திருடிச் சென்றனராம்.

அப்போது, கடலூா் புதுநகா் சோதனைச் சாவடி அருகே நின்றுகொண்டிருந்த

அந்தக் கல்லூரி மாணவா்கள் சந்தேகத்தின்பேரில் பேருந்தை மறித்தனா். பேருந்தை திருடிச் சென்ற இரைவரையும் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். சிதம்பரம் நகர போலீஸாா் மேற்கூறிய இருவரையும் கைது செய்து, பேருந்தை கைப்பற்றினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT