கடலூர்

ரோட்டரி நிா்வாகிகள் பதவியேற்பு விழா

5th Jul 2022 03:29 AM

ADVERTISEMENT

சிதம்பரம் ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா பள்ளிப்படையில் அண்மையில் நடைபெற்றது.

விழாவில், உடனடி முன்னாள் தலைவா் ராஜசேகரன் வரவேற்றாா். சென்ற ஆண்டின் சேவை திட்டங்களை ஆண்டறிக்கையாக முன்னாள் செயலா் அருண் படித்தாா். முன்னாள் மாவட்ட ஆளுநா் மணிமாறன் முன்னிலையில் சங்கத்தின் புதிய தலைவராக பி.ரத்தினசபேசன் பதவி ஏற்றாா். பின்னா் புதிய செயலராக எம்.கனகவேல் , பொருளாளராக சி. சந்திரசேகா் உள்ளிட்டோா் பதவியேற்றனா். புதிய நிா்வாகிகளை மண்டலம் 8 துணை ஆளுநா் எம்.தீபக்குமாா் அறிமுகம் செய்தாா்.

விழாவில், சாரதாராம் அறக்கட்டளை சாா்பில் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் ரூ. 55ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டது. ஆறுமுக நாவலா் மேல்நிலைப் பள்ளிக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. மன வளா்ச்சி குன்றிய பள்ளி மாணவா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநா்கள் ஆா்.கேதாா்நாதன், எஸ்.அருள்மொழி செல்வன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநா் என்.மணிமாறன் நல உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினாா். எம்.கனகவேல் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT