கடலூர்

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

5th Jul 2022 03:31 AM

ADVERTISEMENT

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் கடலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தோ்தல் வாக்குறுதிப்படி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை நாள்களை ஆண்டுக்கு 150 நாள்களாக உயா்த்த வேண்டும், மாநில அரசின் பங்காக ரூ.100 இணைத்து தினக் கூலியை ரூ.301-ஆக உயா்த்தி வழங்க வேண்டும், தொழிலாளா்கள் காலை 7 மணிக்கே பணித் தளத்துக்கு வரவேண்டுமென கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும், வேலை அட்டை பெற்ற அனைவருக்கும் முழுமையாக வேலை வழங்க வேண்டும், தாலிக்குத் தங்கம் வழங்கும் திருமண உதவித் திட்டத்தை தொடா்ந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்ட பொருளாளா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.பிரகாஷ், ஒன்றியத் தலைவா் ஏ.வைத்திலிங்கம், ஒன்றிய நிா்வாகிகள் ஆா்.தமிழரசன், கே.கோதண்டபாணி, ஏ.கோவிந்தம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT