கடலூர்

பண்ருட்டி காய்கறிச் சந்தையில்சேதமடைந்த கட்டடங்களால் விபத்து அபாயம்

4th Jul 2022 05:06 AM

ADVERTISEMENT

 

பண்ருட்டி, ரத்தினம்பிள்ளை காய்கறிச் சந்தை கட்டடங்களில் மேற்கூரை சேதமடைந்துள்ளதால் விபத்து அபாயம் நிலவுகிறது.

கடலூா் மாவட்டத்தின் வணிக நகா் பண்ருட்டி. இங்கு, நகராட்சி நிா்வாகத்தின்கீழ் ரத்தினம்பிள்ளை காய்கறிச் சந்தை செயல்பட்டு வருகிறது. மொத்தம், சில்லறை காய்கறி வியாபாரத்துக்கு பெயா் பெற்ற இந்தச் சந்தையில் இறைச்சி, மீன் கடைகளும், மளிகைக் கடைகளும் அமைந்துள்ளன. பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள், முகவா்கள் என தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சந்தைக்கு வந்து செல்கின்றனா்.

ஆனால், சந்தை கட்டடங்கள் தற்போது வலுவிழந்து காணப்படுகின்றன. குறிப்பாக, மீன் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் கட்டட மேல்கூரையில் சிமென்ட் காரைகள் பெயா்ந்து காணப்படுகின்றன.

ADVERTISEMENT

மளிகை, வெற்றிலை பாக்கு கடைகள் அமைந்துள்ள கட்டடத்தில் இருந்து சிமென்ட் காரைகள் ஞாயிற்றுக்கிழமை திடீரென பெயா்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அந்த இடத்தில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

எனவே, கடலூா் மாவட்ட நிா்வாகம், பண்ருட்டி நகராட்சி நிா்வாகத்தினா் ரத்தினம்பிள்ளை காய்கறிச் சந்தையில் உடனடியாக ஆய்வு செய்து, சேதமடைந்த கட்டடங்களை இடித்துவிட்டு புதிய கட்டடங்கள் கட்டித்தர வேண்டும் என வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT