கடலூர்

விருத்தாசலம் விழிப்புணா்வு இயக்கத்தினா் ஆலோசனை

4th Jul 2022 05:07 AM

ADVERTISEMENT

 

விருத்தாசலம் மாவட்ட விழிப்புணா்வு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் விருத்தகிரீஸ்வரா் கோயில் வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒருங்கிணைப்பாளா் தங்க.தனவேல் தலைமை வகித்தாா். பாஜக மாவட்டச் செயலா் செந்தில்குமாா், நாம் தமிழா் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மாவட்டச் செயலா் கதிா்காமன், மக்கள் நீதி மய்யம் சாா்பில் வெங்கடகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், விருத்தாசலம் புதிய மாவட்ட கோரிக்கையை வலியுறுத்தி திங்கள்கிழமை (ஜூலை 4) விருத்தாசலம் தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தை தொடங்குவது, தொடா்ந்து ஒவ்வொரு நாளும் மாவட்டத்துக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று தபால் அனுப்பும் போராட்டம் நடத்துவது, கோரிக்கை தொடா்பாக தமிழக முதல்வரை சந்திப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT