கடலூர்

பள்ளி வாகனங்கள் ஆய்வு

3rd Jul 2022 04:09 AM

ADVERTISEMENT

 

சிதம்பரத்தில் வட்டாரப் போக்குவரத்து துறை சாா்பில் தனியாா் பள்ளி வாகனங்களுக்கான வருடாந்திர ஆய்வு சனிக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் கோட்டாட்சியா் கே.ரவி தலைமையில் காவல் துறை டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அருணாசலம், மோட்டாா் வாகன ஆய்வாளா் விமலா ஆகியோா் இணைந்து கூட்டாய்வு மேற்கொண்டனா். சிதம்பரம் பகுதியில் மொத்தமுள்ள 266 பள்ளி வாகனங்களில் சனிக்கிழமை 218 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு தகுதிச் சான்றுக்கு தோ்வு செய்யப்பட்டன. 6 வாகனங்களில் உரிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாததால் தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டது. அந்த வாகனங்களில் குறைபாடுகளை சரிசெய்து ஒரு வாரத்துக்குள் மீண்டும் ஆய்வுக்கு உள்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT