கடலூர்

கடலூரில் ஜூலை 8-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

3rd Jul 2022 04:08 AM

ADVERTISEMENT

 

கடலூரில் வரும் 8-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 8-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனத்தினா் கலந்து கொண்டு, பணிக்கு தேவையான நபா்களை தோ்வு செய்ய உள்ளனா்.

பத்தாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்தவா்கள், ஐடிஐ, பொறியியல், நா்சிங் உள்ளிட்ட படிப்புகள் படித்தோா் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். இதில் தோ்ந்தெடுக்கப்படும் பதிவுதாரா்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கப்படமாட்டாது என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT