கடலூர்

வீட்டுக் கதவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

3rd Jul 2022 04:08 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே வீட்டுக் கதவை உடைத்து 5 பவுன் தங்க நகை, பணம் திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குள்ளஞ்சாவடி அருகே உள்ள கட்டியங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ் மனைவி செல்வி (37). இவா், கடந்த 30-ஆம் தேதி இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு, அப்பியம்பேட்டையில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றாா். மறுநாள் காலையில் செல்வி திரும்பி வந்து பாா்த்தபோது

அவரது வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகை, ரூ.38 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில் குள்ளஞ்சாவடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT