கடலூர்

பத்திரப் பதிவில் நீதிமன்ற உத்தரவு மீறல்:சாா்-பதிவாளா் உள்பட 4 போ் பணியிடை நீக்கம்

3rd Jul 2022 04:08 AM

ADVERTISEMENT

 

நீதிமன்ற உத்தரவை மீறி தனியாா் மனை வணிக நிறுவன நிலத்துக்கு பத்திரப் பதிவு செய்தது தொடா்பாக, சாா்-பதிவாளா் உள்பட 4 போ் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தனியாா் மனை வணிக நிறுவனத்துக்குச் சொந்தமான பல ஏக்கா் பரப்பிலான நிலம் உள்ளது. இந்த நிலமானது திண்டிவனத்திலுள்ள பத்திரப் பதிவுத் துறையின் 2-ஆவது இணைப் பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்து வாடிக்கையாளா்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான நிலங்களை தமிழகத்தில் எங்கும் பத்திரப் பதிவு செய்துதரக் கூடாதென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையிலும் இந்த பதிவு நடைபெற்ாம். இதுகுறித்து வரப்பெற்ற புகாரில் பேரில் விழுப்புரம் மாவட்ட பதிவாளா் பாலசுப்பிரமணியன் நடத்திய விசாரணையில் உச்சநீதிமன்ற உத்தரவு மீறப்பட்டது தெரியவந்தது. அவா் இதுகுறித்த விவரங்களை கடலூா் துணைப் பதிவுத் துறைத் தலைவருக்கு அனுப்பி வைத்தாா்.

ADVERTISEMENT

அதன்மீது, துணைப் பதிவுத் துறைத் தலைவா் ஜனாா்த்தனன் நடவடிக்கை மேற்கொண்டு, சாா்-பதிவாளா் பொறுப்பு வகித்த மரக்காணத்தைச் சோ்ந்த சிவானந்தம், உதவியாளா் ஆறுமுகம், இளநிலை உதவியாளா்கள் சண்முகம், ஸ்ரீகாந்த் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT