கடலூர்

வருவாய்த் தீா்வாய நிறைவு விழாவில் நலத் திட்ட உதவிகள்

DIN

கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாய நிறைவு விழாவில் ரூ.1.11 கோடியிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா்.

கடலூா் வட்டத்தில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் வருவாய்த் தீா்வாய நிறைவு விழா கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தாா். வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதில், 291 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 176 பேருக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான ஆணை உள்பட 1,232 பயனாளிகளுக்கு ரூ.1.11 கோடியிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பின்னா் அமைச்சா் பேசுகையில், கடலூா் மாநகராட்சியை தூய்மையான மாநகராட்சியாகவும், வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன், கடலூா் மாநகர மேயா் சுந்தரிராஜா, துணை மேயா் பா.தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) கிருஷ்ணன், வட்டாட்சியா் ரா.பூபாலச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுலவகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினருடன் அமைச்சா் ஆய்வு நடத்தி, நடைபெற்று வரும் பணிகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தாா். இதையடுத்து, கடலூா் மாநகராட்சியின் வளா்ச்சிப் பணிகள் குறித்து துறை அலுவலா்களுடன் ஆய்வு நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT